search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான் தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த இடங்கள் 199 ஆகும்.

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 63.94 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.

    இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த இடங்கள் 199 ஆகும். இதில், பெரும்பான்மையாக பிடிக்க வேண்டிய இடங்கள் 101.

    கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம் வருமாறு:

    ராஜஸ்தானில் பாஜக கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

    சிஎன்என் நியூஸ் 18: பாஜக- 111, காங்கிரஸ்- 74, மற்றவை-14

    ஜன் கி பாத்: பாஜக 100- 122, காங்கிரஸ் 62- 85, மற்றவை 14- 15

    பி- மார்க்யூ: பாஜக 101- 125, காங்கிரஸ் 69- 81, மற்றவை 05- 15

    பால்ஸ்டிராட்: பாஜக 100- 110, காங்கிரஸ் 90- 100, மற்றவை 05-15

    டைம்ஸ் நவ்: பாஜக 108- 128, காங்கிரஸ் 56- 72, மற்றவை 13- 21

    இதையடுத்து, ராஜஸ்தானில் பாஜக கட்சி முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    • ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை
    • அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட், விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன்

    ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 25-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும், FEMA வழக்கு தொடர்பாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் நாளை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் வழங்கியுள்ளது.

    இதுதொடர்பான அசோக் கெலாட் கூறியதாவது:-

    நேற்று, காங்கிரஸ் ராஜஸ்தான் பெண்களுக்கான உத்தரவாதத்தை வெளியிட்டது. இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை, எனது மகனுக்கு ஆஜராகும்படி சம்மன் நடவடிக்கை.

    ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏனென்றால், பெண்கள், விவசாயிகள், ஏழை மக்கள் காங்கிரஸின் உத்தரவாதத்தின் பலன்களை பெறுவதை பா.ஜனதா விரும்பவில்லை. நான் என் சொல்வதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்'' என்றார்.

    நேற்று நடைபெற்ற பேரணியின்போது, அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1.05 கோடி குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்படும்'' என வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த வாரம் சோதனை நடத்தி பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
    • தேர்தலுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில், அசோக் கெலாட்டிற்கு இது சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ராவிற்கு தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ஆறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாகவும் அமலாகத்துறை தெரிவித்துள்ளது.

    ராஜஸ்தான் மாநில பள்ளி ஆசிரியர்கள் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் தினேஷ் கோதானியா மற்றும் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது 12 லட்சம் ரூபாய் கைப்பற்றியதுடன், குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இதுபோன்ற சோதனை அசோக் கெலாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே FEMA வழக்கு தொடர்பாக ஜெய்ப்பூர் அலுவலகத்தில் நாளை ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டிற்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    ×